உலகம்

கரோனா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளுக்குச் சீனா உதவி 

30th Mar 2020 02:13 PM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் உலகப் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. சில நாடுகளில் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அண்மையில், சில ஆசிய நாடுகளுக்கு சீனாவின் பல்வேறு சமூக வட்டாரங்கள் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கின.

சீனாவின் யுன்னான் மாநில அரசு மாலத்தீவுக்கு வழங்கிய உதவிப் பொருட்கள் மார்ச் 27ஆம் நாள் அந்நாட்டைச் சென்றடைந்தன.

மங்கோலியாவுக்குச் சீன அரசு வழங்கிய உதவிப் பொருட்கள் 28ஆம் நாள் உலான்பாடர் நகரைச் சென்றடைந்தது. இதுகுறித்து அந்நாட்டின் துணைத் தலைமையமைச்சர் உல்ஸீசைகான் என்க்துவ்ஷின் கூறுகையில், கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையை இந்தப் பொருட்கள் ஊட்டியுள்ளன என்றார்.

ADVERTISEMENT

மேலும், சீனப் பல்வேறு தரப்புகள் வழங்கிய 3 டன் எடையுடைய உதவிப் பொருட்கள் 29ஆம் நாள் நேபாளத்தைச் சென்றடைந்தன.  அதேநாள், சீனாவின் அலிபாபா குழுமத்தின் பொது நல நிதியமும், ஜாக் மா பொது நல நிதியமும் வழங்கிய மருத்துவப் பொருட்கள் வங்காளத்தேச அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. கரோனா வைரஸ் பரவலை வங்காளதேசம் சமாளிப்பதற்கு இப்பொருட்கள் உதவி அளிக்கும் என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தவிரவும், சீன மருத்துவ நிபுணர்கள் லாவோஸ் மற்றும் பாகிஸ்தானைச் சென்றடைந்து மருத்துவ உதவிகளை அளித்துள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT