உலகம்

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டிரம்புக்குக் கண்டனம்

23rd Mar 2020 12:29 PM

ADVERTISEMENT

 

போதிய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்ப் அரசு உலக அளவில் பரவும் நோயைக் கட்டுப்படுத்த உரிய ஆயத்தம் செய்யவில்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் குற்றம் சாட்டியதாகப் பிரிட்டனின் தி இன்டிபென்டன்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் சூசன் ரைஸ் அமெரிக்க சிஎன்என்-க்குப் பேட்டியளிக்கையில், ஒபாமா அரசில் நிறுவப்பட்ட உலக சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உயிரியல் காப்பு அலுவலகத்தை டிரம்ப் 2018ஆம் ஆண்டில் கலைப்பதாகவும், இதுதான், கரோனா வைரஸ் தடுப்பில் நடப்பு அரசு தாமதமாகச் செயல்பட்டதற்கான காரணமாகும் என்று சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT

டிரம்ப் தனது நிர்வாகத்தின் பதில் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் அதேவேளையில், எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி  கரோனொ வைரஸ் உலகைத் தாக்கியது என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கூற்று தவறானது என்று சூசன் ரைஸ் கூறினார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT