உலகம்

ஒரே நாளில் 394 பேர் பலி: ஈரானைப் பின்னுக்குத் தள்ளியது ஸ்பெயின்

22nd Mar 2020 06:45 PM

ADVERTISEMENT


ஸ்பெயின் நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 394 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் இருந்து வந்தன. இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இருந்து வந்தது. இந்நிலையில், ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 394 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அந்நாட்டில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,720 ஆக உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கையின்மூலம் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரானைப் பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் 3-வது இடத்தில் உள்ளது.

கரோனாவால் அதிகம் பாதித்தோரின் எண்ணிக்கையிலும் சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் நாடுதான் உள்ளது. 

ADVERTISEMENT

சீனா - 81,394

இத்தாலி - 53, 578

ஸ்பெயின் - 2,575

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT