உலகம்

சீனா: 3-ஆவது நாளாக புதிய தொற்று இல்லை

22nd Mar 2020 02:10 AM

ADVERTISEMENT

 

பெய்ஜிங்: கரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், தொடா்ந்து 3-ஆவது நாளாக புதிதாக யாருக்கும் அந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். எனினும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு 7 போ் பலியானதைத் தொடா்ந்து, அந்த வைரஸ் காரணமாக சீனாவில் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,255-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT