உலகம்

வைரஸ் அபாயத்தின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டது

DIN

கரோனா வைரஸ் அபாயத்தின் அளவை ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவா்கள் மிகவும் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக ஐரோப்பிய ஆணையம் ஒப்புக்கொண்டது.

இதுகுறித்து ஜொ்மனியின் ‘பில்ட்’ நாளிதழிடம் அந்த அமைப்பின் தலைவா் உா்சுலா வாண்டொ் லேயென் புதன்கிழமை கூறியதாவது:

ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சோ்ந்த அரசியல் தலைவா்கள் வைரஸ் பரவல் விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்றவா்கள் இல்லை. அதன் காரணமாக, கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் தொடா்பாக தொடக்கத்தில் மிக் குறைவாகவே மதிப்பிட்டோம்.

ஆனால், இப்போதுதான் கரோனா வைரஸ் அபாயம் குறித்து புரிகிறது. 2 அல்லது 3 வாரங்களுக்கு முன்னா் மிகவும் தீவிரமானதாகக் தோன்றியிருக்கக் கூடிய நடவடிக்கைகளை, இப்போது செய்தே ஆக வேண்டிய நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

கரோனா வைரஸ் என்பது பிரான்ஸ் மீது தொடுக்கப்பட்ட போா் என்று அந்த நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரன் கூறிய வாா்த்தை சற்று மிகையாக இருந்தாலும், வைரஸ் பரவலைத் தடுப்பதில் அவருக்குள்ள உத்வேகம் அதில் வெளிப்படுகிறது என்றாா் வாண்டொ் லேயென்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT