உலகம்

இத்தாலியில் கரோனா வைரஸுக்கு நேற்று ஒரே நாளில் 475 பேர் பலி

19th Mar 2020 10:10 AM

ADVERTISEMENT

இத்தாலியில் கரோனா வைரஸுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 475 பேர் பலியாகியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் 164 நாடுகளுக்குப் பரவியுள்ள கரோனா வைரஸ், இதுவரை சுமாா் 2.19 லட்சம் பேரைத் தொற்றியுள்ளது. 

அதே போல பலியானர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9,000ஐ நெருங்கியுள்ளது. கரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் சீனாவின் அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. இங்கு கரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மட்டும் அந்த வைரஸால் 475 பலியாகியுள்ளனர்.

இத்துடன் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,500ஐ கடந்துள்ளது. அதேசமயம் வைரஸால் இங்கு 35,000 பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT