உலகம்

கரோனா பாதிப்பு: சீனாவை மிஞ்சிய உலக நாடுகள்

16th Mar 2020 05:15 PM

ADVERTISEMENT

 

ஜெனீவா: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனாவை உலக நாடுகள் மிஞ்சிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 115 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனாவை உலக நாடுகள் மிஞ்சிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின்  செய்தித் தொடர்பாளர் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

சீன தேசிய சுகாதார ஆணையத்தின் தகவலின்படி தற்போது வரை (திங்கள்) சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,860 ஆக இருக்கிறது. இதுவரை 3,213 பேர் மரணமடைந்துள்ளார்.

அதேநேரம் சீனாவிற்கு வெளியே பல்வேறு உலகநாடுகளிலும் 83,00- க்கு மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக இத்தாலியில் 24, 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 1,809 பேர் மரணமடைந்துள்ளார். இதன்காரணமாக ஐரோப்பாவில் கரோனா பரவலின் மையம் என்று இத்தாலி அழைக்கப்படுகிறது.  

இவ்வாறு அவர் தெரிவித்துளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT