உலகம்

கொவைட் - 19:  அமெரிக்காவின் மீது உலகம் அவநம்பிக்கை

16th Mar 2020 03:28 PM

ADVERTISEMENT

 

அமெரிக்காவில் கரோனா வைரஸின் பரவலைத் தடுப்பில் குறைபாடு இருந்து வரும் நிலையில், இவ்வைரஸின் தோற்றம் குறித்து அமெரிக்காவின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. 

பிப்ரவரி 21ஆம் தேதி ஜப்பானின் அசாகி தொலைக்காட்சி நிலையத்தின் ஒரு நிகழ்ச்சியில், தொற்றுக் காய்ச்சலின் அறிகுறி கொவைட்-19 நோய் காய்ச்சலுடன் ஒத்திருப்பது முதலியவற்றை மேற்கோள் காட்டப்பட்டு, அமெரிக்காவில் கொவைட்-19 நோயாளிகள் சிலர் தொற்றுக் காய்ச்சல் நோயாளிகளாகக் கருதப்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் கிளப்பியது. ஆனால், அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் இதை அப்போது உறுதியாக மறுத்தது. 20 நாட்களுக்கு பிறகு, இவ்வமைப்பின் தலைமை இயக்குநர் அந்தச் சந்தேகத்தை ஏற்றுக்கொண்டது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் கடந்த செப்டம்பரில் தொற்றுக் காய்ச்சல் பரவல் துவங்கியது. அக்டோபரில் அமெரிக்க ராணுவத்தினர், உலக 7ஆவது ராணுவ வீரர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வூ ஹானுக்குச் சென்றனர். போட்டியின்போது, வெளிநாட்டு வீரர்கள் சிலர், தொற்று நோய் பாதிப்புக்குள்ளாகினர் எனத் தெரிவிக்கப்பட்டது. பிறகு டிசம்பர் திங்கள் வூஹானில் முதல் நபர் கொவைட்-19 நோய்க்கு பாதிப்படைந்தார். எனவே இவ்வைரஸின் தோற்றம் அமெரிக்காவில்தான் இருக்கும் என்ற சந்தேகம் தர்க்கத்திற்கு ஏற்றதாக உள்ளது. மேலும், கடந்த ஜுலையில் அமெரிக்க தெட்ரீக் கோட்டையில் அமைந்துள்ள ராணுவத்தின் இரகசியத் தொற்று நோய் ஆய்வகம் மூடப்பட்டதும், இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அண்மையில் கனடா சிந்தனைக் கிடங்கான“உலக ஆராய்ச்சி”என்ற அமைப்பு தனது இணையத்தளத்தில், லாரி ரொமன்னோஃபின் கட்டுரையை வெளியிட்டது. அதில், ஈரான் மற்றும் இத்தாலியில் பரவி வரும் வைரஸ் தொடர்பான ஆய்வின்படி, இவ்விரு நாடுகளில் பரவிய வைரஸ் மரபணு தொகுதி, சீனாவில் பரவிய வைரஸ் மரபணு தொகுதியுடன் வெவ்வேறானது. அதனால் இவ்விரு நாடுகளில் பரவிவரும் வைரஸ் சீனாவிலிருந்து வரவில்லை எனக் கூறபட்டது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ, குடியரசு கட்சியைச் சேர்ந்த சில செனட் அவை உறுப்பினர்கள், வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் ஊடகப் பணியாளர்கள் முதலியோர், பனிப்போர் சிந்தனை மற்றும் தவறான எண்ணத்துடன் சீனா மீது பழி போட்டனர். ஆனால் அவையெல்லாம் ஆதாரமில்லாத வெறும் கட்டுக்கதை. 

தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், அவரச நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, அறிவியல் கண்ணோட்டம் மற்றும் பொறுப்புடன் இவ்வைரஸ் தோன்றிய நேரம் மற்றும் இடம் பற்றிய தகவல்களை உலகத்திடம் வெளிப்படுத்த வேண்டும். இது, அமெரிக்க மக்களின் உடல் நலத்துக்கு மட்டுமல்ல உலக அளவில் வைரஸ் பரவாமல் தடுத்து, பொது சுகாதாரத்தைப் பேணிக்காப்பதற்கும் அவசியமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT