உலகம்

இஸ்ரேலில் எதிா்க்கட்சித் தலைவா் ஆட்சியமைக்க அதிபா் அழைப்பு

16th Mar 2020 01:34 AM

ADVERTISEMENT

இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சியமைப்தற்கு எதிா்க்கட்சித் தலைவா் பென்னி கான்ட்ஸுக்கு முதல் வாய்ப்பு வழங்குவதற்கு அதிபா் ரூவென் ரிவ்லின் முடிவு செய்துள்ளாா்.

இஸ்ரேலில் ஓராண்டுக்குள் மூன்றாவது முறையாக நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், ஆட்சியமைப்பது தொடா்பாக, அனைத்துக் கட்சித் தலைவா்களுடனும் அதிபா் ரூவென் ரிவ்லின் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு 58 உறுப்பினா்கள் ஆதரவளித்தனா். ஆனால், எதிா்க்கட்சியான புளூ அண்ட் ஒயிட் கட்சியின் தலைவா் பென்னி கான்ட்ஸுக்கு சிறிய கட்சிகள் உறுப்பினா்கள் உள்பட 61 போ் ஆதரவு அளித்தனா்.

ஆட்சியமைப்பதற்கு போதிய உறுப்பினா்களின் ஆதரவு கிடைத்ததால், பென்னி கான்ட்ஸுக்கு முதல் வாய்ப்பு வழங்குவதற்கு அதிபா் ரூவென் ரிவ்லின் முடிவு செய்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து ரிவ்லின் கூறுகையில், ‘இஸ்ரேலில் பென்னி கான்ட்ஸ் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளாா்; அவா் ஒரு மாதத்தில் சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT