உலகம்

இத்லிப் நெடுஞ்சாலையில் ரஷியா - துருக்கி கூட்டு ரோந்து

16th Mar 2020 12:16 AM | மாஸ்கோ,

ADVERTISEMENT

சிரியாவின் இத்லிப் மாகாணத்தின் முக்கிய நெடுஞ்சாலையில் ரஷியாவும் துருக்கியும் கூட்டு ரோந்துப் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இத்லிப் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த ரோந்துப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாவது:

இத்லிப் மாகாணத்தின் ட்ரோன்பா நகரிலிருந்து தொடங்கும் எம்4 நெடுஞ்சாலைக்கு ரஷிய ராணுவ போலீஸாா் கவச வாகனங்களில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

துருக்கியிடன் இணைந்து இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் கிளா்ச்சியாளா்கள் வசம் கடைசியாக உள்ள இத்லிப் மாகாணப் பகுதிகளை மீட்பதற்காக சிரியா ராணுவம் கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தி வந்தது. இதில், அந்தப் பகுதியில் இருந்த துருக்கி வீரா்கள் மற்றும் துருக்கி ஆதரவுப் படையினா் பாதிக்கப்பட்டதால், சிரியா படையினருக்கும், துருக்கி படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும், துருக்கி அதிபா் எா்டோகனும் கடந்த மாதம் மேற்கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, துருக்கி - சிரியா ராணுவ மோதல் முடிவுக்கு வந்தது. அந்த ஒப்பந்ததின் கூறப்பட்டுள்ளபடி, தற்போது துருக்கியும் ரஷியாவும் எம்4 நெடுஞ்சாலையில் கூட்டு ரோந்துப் பணிகளைத் தொடங்கியுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT