உலகம்

வைரஸ் பரவல் தடுப்பில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும்: சீனா

13th Mar 2020 11:12 AM

ADVERTISEMENT

 

அமெரிக்க அரசுத் தலைவரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஒப்ரெய்ன் 11ஆம் தேதி கூறுகையில், புதிய ரக கரோனா வைரஸ் வூஹானில் பரவிய தொடக்கத்தில் அது மூடிமறைக்கப்பட்டது என்றும் அதற்கு எதிரான சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் 12ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போது, கொவைட்-19 நோயை உலகளாவிய கொள்ளை நோயாக உலகச் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்நோய் மனிதகுலத்தின் பொது சவாலாக மாறியுள்ளதை இது காட்டியுள்ளது. அமெரிக்காவின் தனியொரு அதிகாரி இத்தருணத்தில் சீனாவே பொறுப்பு என்று கூறுவதற்குப் பதிலாக, வைரஸ் பரவலைத் தடுப்பதிலும் தொடர்புடைய ஒத்துழைப்பை முன்னேற்றுவதிலும் ஒருமனதுடன் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார். ஒழுக்கநெறியும் பொறுப்புணர்வும் இல்லாத அமெரிக்காவின் இச்செயல், அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு எந்த உதவியும் புரியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT

வைரஸ் தொடர்பான தகவல்களை சீனா வெளிப்படையாக வெளியிட்டு, உரிய நேரத்தில் முன்முயற்சியுடன் உலகச் சுகாதார அமைப்புடனும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனும் வைரஸ் மரபணு வரிசையைப் பகிர்ந்து கொண்டது. மேலும், வைரஸ் பரவலுக்கு எதிராக சீனா மேற்கொண்டுள்ள நடவடிக்கை சீனாவின் வேகம் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.

சீனாவின் வலிமைமிக்க நடவடிக்கை, சீன மக்களின் மாபெரும் தியாகம் ஆகியவற்றின் காரணமாகதான், இதர நாடுகளுக்கு இந்நோய் பரவுவது பயனுள்ள முறையில் தடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்தில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது என்றும் கெங் ஷுவாங் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT