உலகம்

இந்தியப் பாரம்பரிய முறைப்படி ''வணக்கம்'' தெரிவித்துக்கொண்ட அமெரிக்க அதிபர் - அயர்லாந்து பிரதமர்

13th Mar 2020 10:21 AM

ADVERTISEMENT

 

ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் மற்றும் அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் ஆகியோர் சந்தித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வெள்ளிக்கிழமை போச்சுவார்த்தை நடத்தினர்.இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

நான் எப்போதும் அடுத்தவருடன் கை குலுக்கும் பழக்கத்தை பெரிதாக வைத்துக்கொண்டதில்லை. இருப்பினும் அதிபரான பிறகு மற்ற தலைவர்களை சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாக கை குலுக்க வேண்டியிருந்தது. ஆனால், நானும், அயர்லாந்தின் பிரதமரும் சந்தித்தபோது கை குலுக்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தோம்? இது ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT

அப்போது தான் நான் இந்தியாவில் கற்றுக்கொண்ட பாரம்பரியமான இரு கைகளையும் இணைத்து வணக்கம் தெரிவிக்கும் முறையைப் பின்ற்றினேன். பதிலுக்கு அவரும் அதைச் செய்தார். இந்தியாவில் இருந்து நான் திரும்பியது முதல் ஒருவரை வரவேற்க நான் இந்தியாவின் வணக்கம் தெரிவிக்கும் நடைமுறையைத் தான் பின்பற்றி வருகிறேன். இது மிகவும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது.

கால்பந்து உள்ளிட்ட இதர விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு வருவது போன்று ஒலிம்பிக் போட்டிகளும் குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க வேண்டும். அதிகளவில் மக்கள் கூடுவதால் இம்முடிவை எடுப்பது சரியாக இருக்கும் என்பது எனது கருத்து என்று தெரிவித்தார்.

ஐரோப்பாவில் தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்றின் தாக்கம் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை முற்றிலும் ஒழிக்கும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று அயர்லாந்து பிரதமர் லியோ தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT