உலகம்

இத்தாலியில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

13th Mar 2020 11:21 AM

ADVERTISEMENT


ரோம்: இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் கரோனா பாதிப்புக்கு 189 பேர் மரணம் அடைந்த நிலையில், வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு வாரத்தில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,016 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த புதன்கிழமை, இத்தாலியில் ஒரே நாளில் 196 பேர் மரணம் அடைந்தனர்.

புதன்கிழமையன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,313 ஆக இருந்த நிலையில், நேற்று இது 2,651 ஆக உயர்ந்தது. இதனால், இத்தாலியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,113 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT