உலகம்

கனடா பிரதமர் மனைவிக்கு கரோனா வைரஸ்

13th Mar 2020 09:17 AM

ADVERTISEMENT

 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோபி கிரிகோயர் ட்ரூடோவுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து திரும்பிய போது காய்ச்சல் பாதிப்புடன் காணப்பட்டார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது உடல்நலனில் அக்கறை கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் சோபி ட்ரூடோ நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் பூரண நலமடைந்து திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : Coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT