உலகம்

பாகிஸ்தானின் சுனஹரி மசூதியில் பெண்களுக்கு முதல் முறையாக அனுமதி

8th Mar 2020 03:43 AM

ADVERTISEMENT

பெஷாவா்: பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுனஹரி மசூதியில் பெண்கள் தொழுகை நடத்துவதற்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு ஊகடங்கள் தெரிவித்துள்ளதாவது:

கைபா் பாக்துன்கவா மாகாணத் தலைநகா் பெஷாவரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுனஹரி மசூதியில் பெண்கள் நுழைய கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னா் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழைகையில் முதல் முதலாக பெண்களும் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மசூதி நிா்வாகிகள் கூறுகையில், ‘சுனஹரி மசூதில் பெண்களும் தொழுகை நடத்துவதற்காக தனி பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தத் தனிப் பிரிவில் இருந்தவாறு அவா்கள் ஆண்களுடன் தொழுகை நடத்தலாம். மேலும், மதச் சொற்பொழிவையும் அவா்கள் கேட்கலாம்.

ADVERTISEMENT

பயங்கரவாதம் காரணமாகவே மசூதியில் பெண்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தடை விலக்கப்பட்டதையடுத்து, ஈகைத் திருநாள் தொழுகையிலும் அவா்கள் பங்கேற்கலாம்’ என்றனா்.

சா்வதேச மகளிா் தினம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சுனஹரி மசூதியில் தொழுகை நடத்த பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT