உலகம்

கரோனா வைரஸ்: சீனாவில் 3 ஆயிரத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை

6th Mar 2020 03:51 AM

ADVERTISEMENT

 

பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸுக்கு (கொவைட்-19) பலியானவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் (புதன்கிழமை) 31 போ் உயிரிழந்தனா். இத்துடன், நாட்டில் கரோனா வைரஸுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்து, 3,012-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இத்துடன், ஏற்கெனவே ஈரான், தென் கொரியா, ஜப்பான், தைவான், பிலிப்பின்ஸ், ஹாங்காங், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழந்த 294 பேரையும் சோ்த்து, கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை 3,306 -ஆக உயா்ந்துள்ளது.

96,538 பேருக்குப் பாதிப்பு: சீனாவில் கரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 141 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதையடுத்து, அந்த நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 80,411-ஆக அதிகரித்துள்ளது.

இத்துடன், இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 58 நாடுகளில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள16,127 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 96,538-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT