உலகம்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அரசாணை வெளியிட்டார் அதிபர் கோத்தபய ராஜபட்ச

2nd Mar 2020 10:06 PM

ADVERTISEMENT

 

கொழும்பு ; இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச திங்கள் இரவு அரசாணை வெளியிட்டுள்ளார்.    

இலங்கையில் அதிபராக கோதபய ராஜபட்சவும், பிரதமராக அவரது சகோதரர் மஹிந்த ராஜபட்சவும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச திங்கள் இரவு அரசாணை வெளியிட்டுள்ளார்.    

ADVERTISEMENT

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் அதிபர் இந்த அரசாணையை பிறப்பித்துள்ளார்.

இந்த அரசாணை குறித்த விபரங்கள் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT