உலகம்

தில்லி வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைப்பு

2nd Mar 2020 03:47 PM

ADVERTISEMENT


புது தில்லி: வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறைவெறியாட்டத்தின் போது பொதுமக்கள் 47 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பினர். மாநிலங்களவையும் மக்களவையும் சில முறை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்தது.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
 

ADVERTISEMENT

Tags : delhi
ADVERTISEMENT
ADVERTISEMENT