உலகம்

ஐரோப்பா, அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல்

2nd Mar 2020 10:30 AM

ADVERTISEMENT

 

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல இடங்களில் கொவைட்-19 நோய் கடந்த வார இறுதி முதல் பரவத் தொடங்கியுள்ளது. 

அமெரிக்காவில் இந்நோய் தொற்றுக்கு ஆளான ஒருவர் உயிரிழந்துள்ளார். மார்ச் முதல் நாள் வரை இத்தாலியில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து நூற்றுக்கு மேல் உயர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளிலும் நிலைமை மாறிக் கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

மார்ச் திங்கள் ஆசியான் நாடுகளின் தலைவர்களுடனான சிறப்பு உச்சி மாநாட்டை வெள்ளை மாளிகை ஒத்தி வைத்துள்ளது. 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளக்கூடிய பெரிய அளவிலான பொது நிகழ்ச்சியை நடத்துவதற்கு பிரான்ஸ் சுகாதார அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கவின் எ.பி செய்தி நிறுவனம் பிப்ரவரி 29ஆம் நாள் கூறுகையில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, சீனாவிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பிற நாடுகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம் என்று தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT