உலகம்

கரோனாவை எதிர்கொள்ள சௌதி அரேபியாவில் 25 மருத்துவமனைகள் தயார்

2nd Mar 2020 12:37 PM

ADVERTISEMENT


ரியாத்: கரோனா வைரஸ் பாதித்தவர்களை மற்றும் அறிகுறியுடன் வருபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க சௌதி அரேபியாவில் 25 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை சௌதி அரேபியாவில் கரோனா வைரஸ் பாதித்தவர்கள் யாரும் இல்லாத நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 மருத்துவமனைகளை தயாராக வைத்துள்ளது சுகாதாரத் துறை அமைச்சகம்.

தற்போதுவரை, சில நாட்டில் இருந்து பொதுமக்கள் சுற்றுலா வர சௌதி அரேபியாவில் விசா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வணிக விசாவுக்கு தடை இல்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, சீனாவைத் தொடர்ந்து ஈரான் மற்றும் இத்தாலி நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அன்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களுக்கும் கரோனா வைரஸ் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT