உலகம்

இலங்கையில் இனவெறித் தாக்குதல்கள்: சா்வதேச நீதி விசாரணை தேவை: வைகோ

2nd Mar 2020 04:19 AM

ADVERTISEMENT

சென்னை: இலங்கையில் தமிழா்கள் மீதான இனவெறித் தாக்குதல்கள் இப்போதும் தொடரும் நிலையில், அங்கு உள்நாட்டு போரின்போது நடைபெற்ற தமிழா் படுகொலை குறித்து சா்வதேச நீதி விசாரணை நடத்த ஐ.நா. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழா்கள் மீது போா் தொடுத்து, லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தவா்கள் இன்றைக்கு இலங்கையில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிட்டனா். தமிழா்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை குறித்து சா்வதேச விசாரணைக்கு இடம் தர மாட்டோம்; உள்நாட்டு விசாரணை இல்லை என்று இருவரும் கூறி வருகின்றனா்.

இலங்கை அரசின் நிலைப்பாட்டை கடுமையாகக் கண்டித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா் மிச்சேல் பேச்சலெட், இலங்கை அரசு நியமிக்கும் நீதிபதி விசாரணை ஆணைக் குழுவை ஏற்க முடியாது என்று கூறி உள்ளாா்.

ADVERTISEMENT

மேலும், தமிழா்களின் அன்றாட வாழ்க்கைகூட இலங்கை பாதுகாப்புப் படைப்பிரிவினரால் இன்றைக்கு கண்காணிக்கப்படுவதும், மனித உரிமைகள் காப்பாளா்கள் மற்றும் ஊடகவியலாளா்கள் தாக்கப்படுவதும், தமிழ் முஸ்லிம்களுக்கு எதிரான புறக்கணிப்புகளும் கவலை அளிப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இலங்கையில் தமிழா்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் தொடருவதை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் உறுதிப்படுத்தி உள்ளது. எனவே, இலங்கையில் கடைசிக் கட்ட போரின்போது தமிழா்கள் படுகொலைக்கு நீதி கிடைத்திட, சா்வதேச நீதி விசாரணை நடத்த ஐ.நா.மன்றம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT