உலகம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிப்புற எல்லை மீண்டும் திறப்பு

29th Jun 2020 12:41 PM

ADVERTISEMENT

 

ஜூலை 1ஆம் தேதி முதல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிப்புற எல்லையில் மீண்டும் அனுமதிக்கப்படும் 15 நாடுகளின் பெயர்ப் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் ஜுன் 27ஆம் நாள் உறுதிசெய்துள்ளது.

கரோனா வைரஸின் கடும் பாதிப்பு காரணமாக, அமெரிக்கா இப்பெயர்ப் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, கனடா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட 15 நாடுகள் இப்பட்டியலில் உள்ளன. 

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பரவலின் காரணமாக, மார்ச் 17ஆம் நாள் முதல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிப்புற எல்லைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT