உலகம்

பாம்பியோவின் பொய்கள்

29th Jun 2020 06:40 PM

ADVERTISEMENT

 

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் புதிய ரக கரோனா வைரஸ் பரவல் மோசமாகி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ வதந்திகளைப் பரப்பி வருகின்றார்.

தொற்று நோய் தடுப்புக்கான சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் சாதனைகளைப் பழிக்கும் அவர், ஆப்பிரிக்காவுக்கு சீனாவின் உதவி பெறும் வாக்குறுதி என்றும் கூறினார். உலக தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டில் பாம்பியோ ஒரு குப்பை போன்று விளங்குகிறார்.

ஆப்பிரிக்காவில் தொற்று நோய் தோன்றிய பின், உரிய உதவியை சீனா உடனுக்குடன் வழங்கியது. 50க்கும் அதிகமான ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கும் பெருவாரியான மருத்துவப் பொருட்களை வழங்கியது, 11 நாடுகளுக்கு மருத்துவக் குழுக்களை அனுப்பி, 30க்கும் அதிகமான நிபுணர் காணொளிக் கூட்டங்களை நடத்தி, சுமார் 400 பயிற்சி நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. ஆப்பிரிக்காவிலுள்ள சீனாவின் 46 நிரந்தர மருத்துவக் குழுக்கள் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ADVERTISEMENT

தொற்று நோய் தடுப்பு பற்றிய சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பேசுகையில், சீன-ஆப்பிரிக்க சுகாதார மிக்க பொது சமூகத்தையும் மேலும் நெருங்கிய சீன-ஆப்பிரிக்க பொது சமூகத்தையும் கூட்டாக உருவாக்க வேண்டும் என்று கூறியதுடன் அதற்குப் பல முன்மொழிவுகளையும் முன்வைத்தார்.

சீனா, ஆப்பிரிக்க மக்களுடன் இணைந்து, இன்னலைச் சமாளித்து வருகின்றது என்று கென்யா ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் கூறினார். தர்மசங்கடமான அச்சூழலில் சீனா உண்மையான நண்பராக செயல்பட்டு வருகின்றது என்று காங்கோ குடியரசு வெளியுறவு அமைச்சர் கூறினார். 

ஆனால், பாம்பியோவின் கருத்துகளில் நட்பு, கடப்பாடு ஆகிய எதுவும்வில்லை. தவறான கருத்தியல், நிலவியல் சார் அரசியல், சுயநலன் ஆகியவை மட்டுமே உள்ளது. குறிப்பாக, பாம்பியோ போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள் ஆப்பிரிக்க நாடுகளை சமத்துவ ஒத்துழைப்புக் கூட்டாளியாக கருதவில்லை. ஆப்பிரிக்க மக்களின் நலன்களில் கவனமும் செலுத்தவில்லை. சொந்த மேலாதிக்கவாதத்தைப் பேணிக்காப்பதற்கான கருவியாக ஆப்பிரிக்காவை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

பாம்பியோ பொய்களை பரப்பக் கூடாது. தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு பணிகளில் அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவிகளை வழங்குவது ஆகியவை தான் பாம்பியோவின் கடமையாகும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

Tags : Pompeo
ADVERTISEMENT
ADVERTISEMENT