உலகம்

கொவைட்-19 நோய்த் தடுப்பில் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்

29th Jun 2020 06:29 PM

ADVERTISEMENT

 

உலகளவில் கொவைட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது பெரும் கவலை அளிப்பதாய் உள்ள நிலைமை. வைரஸ் தொற்றுள்ள ஆனால் நோய் அறிகுறி இல்லாத நபர்களைக் கண்டறிவது மிகக் கடினம். மேலதிக உயிர்களைக் காப்பாற்றும் வகையில், உரிய தடுப்பு மருந்துகள் கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வருவதை முழு உலகமும் எதிர்பார்த்துள்ளது.

கொவைட்-19 நோய்க்கு எதிரான 200க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் ஆய்வுக் கட்டத்தில் உள்ளன. இவற்றில் 15 மனிதச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று உலகச் சுகாதார அமைப்பு ஜுன் 26ஆம் நாள் தெரிவித்தது. இது குறித்து அறிவியல் ஆய்வுத் துறை, தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்பு ஒன்றியம் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த பிரமுகர்கள் கூறுகையில், தடுப்பூசி ஆய்வு மற்றும் மருத்துவச் சோதனை இவ்வைரஸுக்கு எதிரான போராட்டத்தின் துவக்கம். பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

புதிய ரக கரோனா வைரஸ் பரவிய பிறகு, சீனாவின் இராணுவ அறிவியல் கழகம் பல தொழில் நுட்ப நெறிகளுடன் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அது உள்ளூர் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ந்த mRNA தடுப்பூசி ஜுன் 19ஆம் நாள் மருத்துவச் சோதனைக்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற்றுள்ளது. புதிய ரக mRNA தடுப்பூசியின் ஆய்வுக்கு உயர் தொழில் நுட்ப வரையறை உண்டு. இதற்கு முன் அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் குறிப்பிட்ட சில mRNA தடுப்பூசி வகைகள் மருத்துவச் சோதனைக்கு அனுமதிக்கப்பட்டன.

ADVERTISEMENT

மருத்துவச் சோதனைக்கு அனுமதிக்கப்பட்ட சீனாவின் இந்த தடுப்பூசி, உலகிற்கு புதிய நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது. இவ்வாண்டு நடைபெற்ற 73ஆவது உலக சுகாதார மாநாட்டின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில், சீனாவின் கொவைட்-19 நோய்த் தடுப்பூசி ஆய்வு வெற்றி பெற்ற பிறகு, உலகப் பொது உற்பத்திப் பொருளாக அது பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை நோய் உலகளவில் பரவும் போது, உலக ஒத்துழைப்பை முன்னேற்றி, தடுப்பூசியின் ஆய்வு, உற்பத்தி மற்றும் சமமான வினியோகத்தை நனவாக்குவதே வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அடிப்படை வழிமுறை ஆகும். உலகச் சுகாதாரப் பாதுகாப்பைப் பேணிக்காப்பதில், முக்கியத் தடுப்பு மருந்துகளின் ஆய்வு, தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பலவீனமான நாடுகளின் பொது சுகாதார அமைப்பு முறையின் கட்டுமானம் ஆகியவை, தனியொரு நாட்டின் ஆற்றலுடன் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளாகும். பலதரப்பு ஒத்துழைப்புடன், பல்வேறு மூலவளங்களைத் திரட்டுவதன் மூலம் பயனுள்ள தீர்வு கிடைக்கும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT