உலகம்

பல்வேறு நாடுகளில் மிக முன்னதாகவே கரோனா வைரஸ் பரவியுள்ளது

29th Jun 2020 03:23 PM

ADVERTISEMENT

 

உலகளவில் கரோனா வைரஸ் மீதான ஆய்வு மென்மேலும் ஆழமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலம் மிக முன்னதாக இருக்கக்கூடும் என்று ஹாங்காங் தா குன் நாளேடு ஜுன் 28ஆம் நாள் தெரிவித்தது. 

2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் சேகரிக்கப்பட்ட 500 ரத்த மாதிரிகளில் 2 மாதிரிகளில் கரோனா வைரஸ்  எதிர்ப்பு பொருளை ஜப்பானின் செஞ்சிலுவைச் சங்கம் கண்டறிந்துள்ளது என்று மே 15ஆம் நாள் தெரிவிக்கப்பட்டது.

ஸ்பெயினில் 2019ஆம் ஆண்டு மார்ச்சில் சேகரிக்கப்பட்ட கழிவு நீரின் மாதிரியில் ஜுன் 26ஆம் நாள் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. சீனாவில் பாதிக்கப்பட்ட முதலாவது நோயாளியை விட இது 9 திங்கள் முன் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அமெரிக்காவின் சாந்தா கிளாரா மாவட்டம் ஏப்ரல் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, அங்கு பிப்ரவரி 6ஆம் நாள் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் உள்ளனர். 

மேலும், பிரான்ஸ் கோல்மர் நகரிலுள்ள ஆல்பர்ட் ஸ்விட்சர் மருத்துவமனை மே 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, இம்மருத்துவமனையைச் சேர்ந்த நோயளிகளில் சிலர் கடந்த ஆண்டின் நவம்பர் 16ஆம் நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். 

தவிர, இத்தாலியின் மிலன் மற்றும் டரின் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் சேகரிக்கப்பட்ட கழிவு நீரின் மாதிரியில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது என்று அந்நாட்டின் உயர் நிலை சுகாதார ஆய்வகம் ஜுன் 18ஆம் நாள் தெரிவித்தது. 

கரோனா வைரஸ் பரவலின் ஊற்றுகண் பற்றி இதுவரை உறுதியான தகவல் இல்லை. ஆனால், 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 7ஆம் நாள் வரையிலான காலத்தில் மக்கள் முதன்முறையாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதற்கு வாய்ப்புண்டு என்று பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பீட்டர் ஃபார்ஸ்டர் கருத்து தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT