உலகம்

சீன டிராகன் படகு விழா: விடுமுறையில் சுற்றுலா துறை 

29th Jun 2020 12:34 PM

ADVERTISEMENT


சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, டிராகன் படகு விழாவுக்கான 3 நாட்கள் விடுமுறையில் சீனாவில் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 88 லட்சத்து 9000 ஐ எட்டியது. அதற்கான வருமானம் 1228 கோடி யுவானை அடைந்தது. 

பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. 92.4 சதவீத பயணிகள் இவ்விடுமுறையில் பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தனர். 

கரோனா வைரஸ் பரவல் தடுப்புக் காலத்தில் இவ்வாண்டின் டிராகன் படகு விழா பயணம் அறிவார்ந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, சீனாவில் 90 சதவீததுக்கு மேலான காட்சியிடங்களில் பயணம் மேற்கொள்வதற்கு இணையத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT