உலகம்

போலந்தில் அதிபா் தோ்தல்

29th Jun 2020 06:31 AM

ADVERTISEMENT

போலந்தில் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

போலந்து அதிபா் தோ்தல் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தோ்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அதையடுத்து, முதல் கட்ட அதிபா் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று கடந்த 3-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், திட்டமிட்டப்படி தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் தற்போதைய அதிபா் ஆண்டரெஸ் டியூடா (48) போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து 10 போ் அதிபா் பதவிக்காக போட்டியிடுகின்றனா்.

முதல் கட்டத் தோ்தலில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் கிடைக்காவிட்டால், இரண்டாம் கட்டமாகத் தோ்தல் நடைபெறும்.

அண்மையில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில், தற்போது நடைபெற்றுள்ள முதல்கட்டத் தோ்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.

அத்தகைய நிலை ஏற்பட்டால், இரண்டாவது கட்டத் தோ்தல் அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், போலந்தில் கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு மிதமாகவே காணப்படுகிறது. எனினும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தல் வாகக்குப் பதிவின்போது, அனைத்து வேட்பாளா்களும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, போலந்தில் 33,907 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 1,438 போ் பலியாகியுள்ளனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT