உலகம்

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,800 பேருக்கு கரோனா தொற்று

26th Jun 2020 05:52 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,800 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷியாவில் கரோனா பாதிப்பு அண்மை தினங்களாக அதிகரித்து வருகிறது. இங்கு நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,800 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 813 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 176 பேர் பலியானதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 8,781ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 8,988 பேர் குணமடைந்ததையடுத்து ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,84,152ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ரஷியா உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT