உலகம்

டிராகன் படகுத் திருவிழா கொண்டாட்டங்கள்

26th Jun 2020 05:17 PM

ADVERTISEMENT

 

சீனாவின் பாரம்பரிய விழாக்களுள் ஒன்றான டிராகன் படகுத் திருவிழா ஜூன் 25ஆம் நாள் உலகம் முழுவதும் உள்ள சீனர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

ஹாங்காங் மக்கள், பாரம்பரிய வழிமுறை மூலம் படகுப் போட்டி நடத்தி இந்த விழாவைக் கொண்டாடினர். விழாச் சூழ்நிலையில் ஹாங்காங் முழுவதும் நிதானம் மற்றும் செழுமை நோக்கித் திரும்பி வருவதை உணர முடிந்தது.

இது குறித்து படகுப் போட்டியில் கலந்து கொண்ட கே சுவேடிங் பேசுகையில்,

ADVERTISEMENT

ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தடுப்புப் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நாங்கள் ஹாங்காங்கின் எதிர்கால வளர்ச்சியின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சி ஆன் நகரில் சீனப் பண்பாட்டைப் பரவல் செய்யும் வகையில், பல்வேறு பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களை மையப் பொருளாகக் கொண்டு சுற்றுலா திட்டங்கள் வெளியிடப்பட்டன. 

மாலியில் உள்ள சீனாவின் 7ஆவது அமைதிக்காப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள், சஹாரா பாலைவனத்தில் இருந்தவாறு டிராகன் படகுத் திருவிழாவை வரவேற்றனர். சீனாவின் பாரம்பரிய விழா நாட்களில் அவர்கள் அமைதிக்காப்புப் பணியில் ஈடுபடும் வெளிநாட்டு படைவீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது வழக்கமாகியுள்ளது. இது நட்புப் பரிமாற்றத்திற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT