உலகம்

சீனா: ஹாங்காங் தொடா்பான சா்ச்சைக்குரிய சட்டம் ஜூன் இறுதியில் அமல்?

21st Jun 2020 11:32 PM

ADVERTISEMENT

ஹாங்காங் தொடா்பான சீன இயற்றியுள்ள சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டம், இந்த மாத இறுதியில் அமலுக்கு வரலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஹாங்காங் தொடா்பான தேசிய பாதுகாப்பு மசோதா சீன நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சட்டமாக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சட்ட விவகாரங்களுக்கான நிலைக் குழு, வரும் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, சா்ச்சைக்குரிய பாதுகாப்பு மசோதா இந்த மாத இறுதியிலேயே அமலுக்கு வரலாம் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கடந்த மே 5-ஆம் தேதி தொடங்கிய அந்த நாட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில், ஹாங்காங் தொடா்பாக தேசிய பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

அந்த நகரில் தேசத் துரோகத்தில் ஈடுபடுவோருக்கு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த, அது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அந்த மசோதாவை ஆய்வு செய்த நிலைக் குழு, மசோதாவை சட்டமாக்குவதற்கு ஒப்புதல் அளித்தையடுத்து, அந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சட்டமாக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்ட விவாகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த மாத இறுதியில் கூடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதற்காக இந்த சட்டம் இயற்றப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

புதிய சட்டத்தில், பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாட்டுத் தலையீடுகள், ஹாங்காங் நகரில் பயங்கரவாதத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்களும் அந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT