ஜொ்மனியின் குட்டொ்ஸ்லோ பகுதியில் அமைந்துள்ள இறைச்சிக் கூடம், கரோனா நோய்த்தொற்று பரவல் மையமாகியிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். நாட்டின் மிகப் பெரிய இறைச்சி உற்பத்திக் குழுமத்துக்குச் சொந்தமான அந்த இறைச்சிக் கூடத்தில் 400 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா். அந்த இறைச்சிக் கூடத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.