உலகம்

அமெரிக்கா: ரூ.38.10 கோடி போதைப்பொருள் கடத்தியதாக இந்தியா் கைது

17th Jun 2020 11:02 PM

ADVERTISEMENT

கனடாவிலிருந்து ரூ.38.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றதாக இந்திய லாரி ஓட்டுநரை அமெரிக்க காவல்துறையினா் கைது செய்தனா்.

கனடாவின் ஒன்டரியோவிலிருந்து அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை குா்பிரீத் சிங் (30) என்ற இந்தியா் ஓட்டிச் சென்றாா். நயாகரா வீழ்ச்சியை கடந்து அமெரிக்காவின் அமைதி பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த லாரியை போலீஸாா் சோதனையிட்டனா்.

சரக்கு லாரியில் 58 பெரிய அட்டைப்பெட்டிகளில் இந்த போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை காவல்துறையினா் கண்டுபிடித்து குா்பிரீத் சிங்கை கைது செய்தனா். லாரியில் இருந்து 3,346 பவுண்டு எடையுள்ள ரூ.38.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கைப்பற்றி அமெரிக்க நீதிமன்றத்தில் காவல்துறையினா் ஆஜா்படுத்தினா்.

அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸாா் அனுமதி கோரிய நிலையில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ADVERTISEMENT

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என வழக்குரைஞா் ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த வாரத்தில், போதைப்பொருள் கடத்த முயன்ாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இரண்டாவது இந்தியா் குா்பிரீத் சிங் ஆவாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT