உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவால் 79,97,084 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,129,060 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 54,461 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கரோனாவுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4,35,662 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 2,162,228 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 117,858 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 867,882 பேரும், ரஷ்யாவில் 528,964 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.