உலகம்

திபெத்தின் தாங்கா ஓவிய கலையின் வாரிசுகள்

15th Jun 2020 10:54 AM

ADVERTISEMENT

 

தாங்கா ஓவியம், சீனாவின் திபெத் இனப் பண்பாட்டில் தனிச்சிறப்பியல்பான ஓவியக் கலையாகும். அக்கால ஓவியர்கள் தங்களது கைவினைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, துணி, பட்டு, தாள் ஆகியனவற்றில் வரைந்த இந்த ஓவியங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் இன்னமும் பளிச்சிடுகின்றன.

இவ்வகை ஓவியங்களின் வண்ணங்களுக்காக தங்கம், வெள்ளி, முத்து போன்ற அரிய தாதுக்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு தலைசிறந்த தாங்கா ஓவியத்தினை வரைய சுமார் ஓராண்டு காலம் தேவை . 

ADVERTISEMENT

ஒவ்வொரு தாங்கா ஓவியத்திற்குப் பின் திபெத்தின் மரபுவழி புத்த மதம் தொடர்பான கதை உள்ளது. 

திபெத்தில், தாங்கா ஓவியர்கள் லாரெபா என்று அழைக்கப்படுகின்றனர். லாரெபா என்றால் புத்தர் அல்லது கடவுளை ஓவியமாக வரைபவர் என்று பொருள். ஜூன் 13-ஆம் நாள் நானும் கலைமணியும்சிச்சுவான் மாநிலத்தின் கான் சி ட்சோவைச் சேர்ந்த தாவ் ஃபூ எனும் வட்டத்தினைச் சென்றடைந்தோம். 

இங்கு, தாங்கா ஓவியர்களுக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்று இருக்கின்றது. இதில், லாங் கா ட்செ(Lang KaJie) எனும் புகழ்பெற்ற தாங்கா ஓவியரின் 9ஆவது தலைமுறையினர் மாணவர்களுக்கு ஓவியக் கலையைக் கற்றுக்கொடுத்து வருகின்றனர். 

வறுமை நிலையிலுள்ள மாணவர்கள் தாங்கா ஓவியத்தின் அனைத்துத் தொழில் நுட்பங்களையும் கற்றுத்தேர்ச்சி பெற்ற பின் வளமான வாழக்கையைப் பெறலாம்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT