உலகம்

சீனாவில் பொருளாதார மீட்சி பற்றிய தரவுகள்

15th Jun 2020 06:38 PM

ADVERTISEMENT

 

மே திங்கள் வெளியிடப்பட்ட தேசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்களின்படி, சீனாவில் பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிர்பந்தம் இருந்தாலும் சரி இன்னல்களைச் சமாளிக்கும் திறன் சீனா உள்ளதை இது காட்டுகின்றது.

கரோனா பாதிப்பின் தாக்கத்தில், சீனா பொருளாதார வளர்ச்சி விதிகளின்படி, இலக்குகளைச் சரிபடுத்தி, மக்களின் வேலை வாய்ப்பு, அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட துறைகளில் உத்தரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்விளைவாக, பொருளாதாரத்துக்கான அடிப்படை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தவிரவும், கடந்த 3 திங்களின் சந்தை விற்பனை நிலைமையைப் பார்த்தால், 140 கோடி மக்களின் நுகர்வு ஆற்றல் தொடர்ந்து சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான முதன்மை உந்து சக்தி என்பது தெளிவாகின்றது.

ADVERTISEMENT

மே திங்களில் உயர் தொழில் நுட்பமுடைய ஆக்கத் தொழிலின் அதிகரிப்பு மதிப்பு 8.9 விழுக்காடு கூடுதலாகும். முப்பரிமாண அச்சிடுதல் வசதிகள், நுண்மதி நுட்ப கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி அளவு 70 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

சீனச் சந்தையின் ஈர்ப்பு ஆற்றல் கவனிக்கப்படத்தக்க ஒன்றாகும். 

குவால்காம் நிறுவனம் அண்மையில் சீனாவின் 3 அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்தது. இந்நிறுவனத்தின் உயர் நிலை நிர்வாகி ஒருவர் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த பேட்டியில், இந்த மூன்று முதலீடுகளும் இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்டன. சீனாவின் 5ஜி தொழில் நுட்பம் உலகளவில் முன்னணியில் உள்ளது என்றும், சீனச் சந்தையின் மீது குவால்காம் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT