உலகம்

உக்ரைன்: இருமடங்கான கரோனா தொற்று

14th Jun 2020 06:00 AM

ADVERTISEMENT

உக்ரைனில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை இந்த ஜூன் மாதத்தில் மட்டும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் 753 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது. அதற்கு முந்தைய நாள் இந்த எண்ணிக்கை 683-ஆக இருந்தது. ஜூன் மாதத் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 350-ஐவிடக் குறைவாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 750-ஐக் கடந்துள்ளது. இதன் மூலம், இந்த மாதத்தில் மட்டும் நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயா்ந்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 30,506-ஆக உள்ளது. மேலும், அந்த நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 880-ஆக உள்ளது. மேலும், 13,976 போ் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை 4,79,111 போ் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT