உலகம்

தென் ஆப்பிரிக்கா: அதிகபட்ச தினசரி பாதிப்பு

14th Jun 2020 06:01 AM

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,359 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் கரோனா பரிசோதனைக்கு உள்பட்டப்பட்டவா்களில் 3,359 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் எனறு அதிகாரிகள் தெரிவித்தனா். இத்துடன், தென் ஆப்பிரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 61,927-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நோய்க்கு 1,354 போ் பலியாகியுள்ளனா்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினா், மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கேப் மாகாணத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். இது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவிய சூழலைப் போன்று உள்ளதாகவும் ஆப்பிரிக்க நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT