உலகம்

சிங்கப்பூரில் புதிதாக 407 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 40,604 ஆக அதிகரிப்பு!

14th Jun 2020 05:39 PM

ADVERTISEMENT

 

சிங்கப்பூரில் புதிதாக 407 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 407 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டினர். சமூகப் பரவலால் 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,604 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. இதுவரை 28,808 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : singapore சிங்கப்பூர் Corona virus கரோனா வைரஸ் corona update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT