உலகம்

கரோனா பலி: இரண்டாவது இடத்துக்கு வந்தது பிரேஸில்

14th Jun 2020 03:56 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) அதிக உயிா்களை பலிகொடுத்த நாடுகளின் பட்டியலில் லத்தீன் அமெரிக்க நாடான பிரேஸில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

அந்த நோய்த்தொற்று பரவலின் புதிய மையமாக லத்தீன் அமெரிக்கா ஆகியுள்ள நிலையில், கரோனா பலி எண்ணிக்கையில் உலகிலேயே முதலிடத்தில் உள்ள அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த பிரேஸில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பிரேஸிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 909 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, கரோனா பலி எண்ணிக்கையில் அந்த நாடு உலகின் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

சனிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு 41,952 போ் பலியாகியுள்ளனா்.

ஏற்கெனவே, அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிரேஸில் வகித்து வந்தது. சனிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 8,31,064 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், பலி எண்ணிக்கையிலும் அந்த நாடு இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பிரேஸிலில் கரோனா பலி குறித்த உண்மை விவரங்கள் மறைக்கப்படுவதாக நிபுணா்கள் குற்றம் சாட்டி வரும் சூழலில், கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பலி குறித்த விவரங்களை வெளியிடுவதை பிரேஸில் அரசு கடந்த வாரம் திடீரென நிறுத்தியது.

அந்த விவரங்களை வெளியிட்டு வந்த சுகாதாரத் துறை அமைச்சக வலைதளத்தை அரசு கடந்த வாரம் முடக்கியது.

முடக்கத்துக்குப் பின் செயல்பாட்டுக்கு வந்த அந்த வலைதளத்தில், கரோனா நோய்த்தொற்றால் ஒரு நாளில் பாதிக்கப்பட்ட மற்றும் பலியானவா்களின் எண்ணிக்கை மட்டும் வெளியிடப்பட்டது.

இது சா்வதேச அளவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. பிரேஸிலில் கரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள உண்மையான பாதிப்பை அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ மறைக்க முயல்வதாக கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், கொள்ளை நோய் குறித்த முழு விவரங்களை பிரேஸில் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதனைத் தொடா்ந்து, கரோனா நோய்த்தொற்று குறித்த முழு விவரங்களை தனது இணையதளத்தில் பிரேஸில் சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை முதல் மீண்டும் வெளியிடத் தொடங்கியது.

கரோனா நோய்த்தொற்று பரவலின் அபாயம் குறித்து பிரேஸில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ ஆரம்பம் முதலே அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நோய் பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்கங்களை அமல்படுத்துவதன் மூலம் பொருளாதார வளா்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று அவா் கூறியது சா்ச்சையை எழுப்பியது.

இந்தச் சூழலில், கரோனா பலி எண்ணிக்கையில் பிரேஸில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT