உலகம்

சீனாவில் சந்தைகள் மூடல்: புதிதாக 66 பேருக்கு கரோனா

14th Jun 2020 10:50 PM

ADVERTISEMENT

சீனாவில் புதிதாக 66 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தலைநகர் பெய்ஜிங்கில் காய்கறி மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்யும் மொத்த சந்தைகள் மூடப்பட்டுள்ளன.  

இது தொடா்பாக சீன சுகாதாரத் துறை கூறியதாவது:

பெய்ஜிங்கில் 36 பேருக்கும், லியாங்கின் பிராந்தியத்தில் இருவருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. இது தவிர அறிகுறிகள் இல்லாத சிலருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை நடத்தப்பட்டது. அவா்களில் 28 பேருக்கு கரோனா உறுதியானது. இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அறிகுறியில்லாத நபா்களால்தான் இப்போது புதிதாக கரோனா தொற்று சிலருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகா் பெய்ஜிங்கில் மட்டும் கடந்த சில நாள்களில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவது அதிகரித்துள்ளது. நாட்டில் இப்போது மொத்தம் 129 போ் சிகிச்சையில் உள்ளனா். இதில் ஒருவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளாா். இதுவரை 78,369 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். 4,634 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா். நாட்டில் மொத்த பாதிப்பு 83,132-ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT