உலகம்

கனடாவில் பூர்விகக் குடியினத் தலைவர் தாக்கப்பட்ட அதிர்ச்சி விடியோ வெளியானது!

14th Jun 2020 12:28 PM

ADVERTISEMENT

 

கனடாவில் பூர்விகக் குடியினத்தின் தலைவரான ஆலன் ஆதம் அந்நாட்டு போலீஸாரால் தாக்கப்பட்ட விடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

கனடாவில் 'சிபெவ்யான்' என்ற பூர்விக குடிமக்களின் தலைவரான ஆலன் ஆதம், கடந்த மார்ச் 10 ஆம் தேதி அல்பர்ட்டா என்ற இடத்தில் ஒரு காஸினோவுக்கு அருகே தனது காரை நிறுத்தியபோது போலீஸாரால் சிறைபிடிக்கப்பட்டார். அவரது கார் நம்பர் பிளேட் காலாவதியானதாக அவரை போலீஸார் கைது செய்ததாக கூறப்படுகிறது. அப்போது போலிஸார் ஆதமை கடுமையாக தாக்கியிருந்தனர். 

இந்த சம்பவம் அந்த சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆதம் தாக்கப்பட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

ஆலம் தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சி அளிப்பதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்தினை அடுத்து இந்த விடியோவும் தற்போது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Tags : கனடா Allan adam in Canada Allan Adam Canadian Allan Adam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT