உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு தொற்று

14th Jun 2020 03:53 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமா் யூசுஃப் கிலானிக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கரோனாவுக்கு இதுவரை 2,551 போ் பலியாகியுள்ள நிலையில், அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒரு முக்கிய அரசியல் தலைவராக யூசுஃப் கிலானி ஆகியுள்ளாா்.

67 வயதாகும் கிலானி, ஊழல் வழக்கு ஒன்று தொடா்பாக தேசிய ஊழல் தடுப்பு நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றதைத் தொடா்ந்து, அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே, முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் சகோதரரும், முக்கிய எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷாபாஸ் நவாஸுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவரும், அதற்கு முன்னா் தேசிய ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கு விசாரணையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் யூசுஃப் கிலானி உள்பட 6,472 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,32,405-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT