உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 77.39 லட்சத்தைத் தாண்டியது!

13th Jun 2020 11:06 AM

ADVERTISEMENT

 

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 77.39 லட்சமாக உயர்ந்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. சர்வதேச அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

உலகம் முழுவதும் கரோனாவால் 77,39,944 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,966,293 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 53,888 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கரோனாவுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4,28,337 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அமெரிக்காவில் அதிகபட்சமாக 21 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,16,825 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், ரஷ்யாவில் 5 லட்சத்தையும் தாண்டி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT