உலகம்

உலகளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 74,59,741 ஆக உயர்வு

11th Jun 2020 11:31 AM

ADVERTISEMENT

 

ஜூன் 11-ம் தேதி காலை நிலவரப்படி உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,459,741 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவின் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 215 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் உலக நாடுகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,459,741 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பலியானோர் எண்ணிக்கை 4,19,041 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும் பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,778,537 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,66,401 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,15,130 ஆக உயர்ந்துள்ளது. 

பிரேசிலில் கரோனா பாதிப்பு 7,75,184 ஆகவும், ரஷ்யாவில் 4,93,657, ஸ்பெயினில் 2,89,360, பிரிட்டனில் 2,90,143 பேருக்கும், இத்தாலியில் 2,35,763, ஜெர்மனியில் 1,86,866 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 

Tags : கரோனா வைரஸ் கொவைட் 19 பாதிப்பு worldwide coronavirus உலகளவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT