உலகம்

கொவைட்-19 தடுப்பில் அமெரிக்க மனித உரிமை பிரச்னை

11th Jun 2020 12:28 PM

ADVERTISEMENT

 

சீன மனித உரிமை ஆய்வு சங்கம் 11ஆம் நாள் “கொவைட்-19 நோய் தடுப்பில் வெளிப்பட்ட அமெரிக்க மனித உரிமை நெருக்கடி” என்ற கட்டுரையை வெளியிட்டது.

இதில், தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் அமெரிக்க அரசு துறைவான பயன் மற்றும் ஆற்றலை கொண்டிருந்ததன் காரணமாக கரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது என்றும் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்காவில் நீண்டகாலமாக நிலவி வரும் ஏழை பணக்கார இடைவெளி, இனவெறிப் பாகுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் தொடர்ந்து மோசமாகி வருவதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மனித உரிமை பிரச்சினையால் ஏற்பட்ட துயரமான நிலையில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

உலக மக்கள் தொற்று நோயை எதிர்நோக்கி வரும் வேளையில், அமெரிக்க அரசு பொறுப்பைத் தட்டிக்கழித்து, சர்வதேச சமூக ஒற்றுமைக்கான ஒத்துழைப்பை கடுமையாகச் சீர்குலைத்து, சர்வதேச மனித உரிமை சட்ட எழுச்சியுடன் முரண்பட்டு நிற்பதாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

Tags : கொவைட்-19 covid-19 human rights மனித உரிமை blockade china
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT