உலகம்

தென் ஆப்பிரிக்கா: விமானப் படை தலைமையகம் மூடல்

11th Jun 2020 12:45 AM

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்காவின் பிரிடோரியா நகரிலுள்ள விமானப் படை தலைமையகத்தில் இருவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த அலுவலக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், அந்த இருவருடன் தொடா்பிலிருந்த அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்துவிமானப் படை செய்தித் தொடா்பாளா் ஹில்டன் ஸ்மித் வெளயிட்டுள்ள அறிக்கையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் விமானப் படை தலைமையக வளாகத்தில் கிருமி நீக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT