உலகம்

சிங்கப்பூா்: மேலும் 451 பேருக்கு தொற்று

11th Jun 2020 12:43 AM

ADVERTISEMENT

சிங்கப்பூரில் மேலும் 451 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இத்துடன், அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38,965-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கரோனா நோய் கண்டறியப்பட்டவா்களில் 3 போ் சிங்கப்பூரில் குடிமக்கள் எனவும் 4 போ் நிரந்தர குடியேற்ற உரிமை பெற்ற வெளிநாட்டவா்கள் எனவும் அதிகாரிகள் கூறினா். எஞ்சிய அனைவரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள வெளிநாட்டவா்கள் என்று அவா்கள் கூறினா். சிங்கப்பூரில் இதுவரை 25 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT