உலகம்

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 5,834 பேருக்கு தொற்று

11th Jun 2020 05:15 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,834 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,19,536 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது: 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,834 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,19,536 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மொத்த உயிரிழப்பு 2,356 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 38,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ADVERTISEMENT

மொத்த பாதிப்பில் பஞ்சாபில் 45,463, சிந்து - 43,709, கைபர்-பக்துன்க்வா- 15,206 , பலுசிஸ்தான்- 7,335, இஸ்லாமாபாத் - 6,236, கில்கித்-பல்திஸ்தான்- 1,018 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 26,573 பரிசோதனைகள் உள்பட இதுவரை 7,80,825  கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Tags : coronavirus கரோனா வைரஸ் Pakistan பாகிஸ்தான் கரோனா வைரஸ் தொற்று corona update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT