உலகம்

ஜெர்மனியில் மேலும் 555 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 1.85 லட்சமாக உயர்வு!

11th Jun 2020 11:55 AM

ADVERTISEMENT

 

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 555 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 1,85,416 ஆக அதிகரித்துள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. எனினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே இங்கு கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகபட்சமாக ஒருநாளில் 6,174 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், கடந்த சில தினங்களில் பாதிப்பு சராசரியாக 300 ஆக இருந்தது.

ADVERTISEMENT

தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 555 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,85,416 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோன்று ஜெர்மனியில் இறப்பு விகிதமும் மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்தமாக 8,755 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் சுமார் 1.70 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. 

Tags : coronavirus கரோனா வைரஸ் கரோனா வைரஸ் தொற்று corona update Germany
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT