உலகம்

ஆப்பிரிக்காவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

11th Jun 2020 10:25 PM

ADVERTISEMENT

ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா நோய்த்தொற்றின் (கொவைட்-19) தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆப்பிரிக்க பிராந்தியத்துக்கான அந்த அமைப்பின் இயக்குநா் மாட்ஷிடிசோ மொயேட்சி வியாழக்கிழமை வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகின் மற்ற பகுதிகளை விட ஆப்பிரிக்கப் பகுதியில் கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு குறைவாகவே உள்ளது.

ஆனாலும், இந்தப் பிராந்தியத்தில் கரோனாவின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

ஆப்பிரிக்க நாடுகளின் தலைநகரங்களில் மட்டுமே அதிகம் காணப்பட்ட அந்த நோயின் தாக்கம், தற்போது மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

இந்தப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் கரோனா பரிசோதனை வசதிகள் குறைவாக இருப்பதும் தொற்றுநோய் தடுப்பு கவசங்கள் மருந்துகள் உள்ளிட்ட பொருள்களின் தட்டுப்பாட்டாலும் கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.

இந்தச் சூழலிலும், கரோனா நோய்த்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள், உயிரிழப்புகளை அதிகாரிகள் தவறாமல் பதிவு செய்து வருகின்றனா்.

தென் ஆப்பிரிக்காவில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் நான்கில் ஒரு பகுதியினா் மேற்குப் பகுதியில் உள்ள கேப் மாகாணத்தில் உள்ளனா். அந்தப் பகுதியில் மட்டும் அதிவேகமாக கரோனா நோய்த்தொற்று பரவி வருவது, ஐரோப்பிய நாடுகளின் நிலவரத்தை ஒத்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 75 சதவீதம் போ் வெறும் 10 நாடுகளில் வசித்து வருகின்றனா். இதுதவிர, இந்தப் பிராந்தியத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.

அந்த நோய்த்தொற்று பரவலைத் தடுப்பு நிறுத்துவதற்கான சக்தி வாய்ந்த தடுப்பு மருந்து கண்டறியப்படும் வரை, ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தடுக்க முடியாத நிலை உள்ளது. அதுவரை தென் ஆப்பிரிக்காவைப் போலவே, அல்ஜீரியா, கேமரூன் போன்ற நாடுகளில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டும் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்துவதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

ஆப்பிரிக்க கண்டத்திலேயே தென் ஆப்பிரிக்காவில்தான் மருத்துவக் கட்டமைப்பு சிறப்பான முறையில் அமைந்துள்ளது. எனினும், அங்கு கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதால், அந்த நோயின் பாதிப்பு மருத்துவக் கட்டமைப்பை விஞ்சிவிடும் அபாயம் இருப்பதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

 

கரோனா நிலவரம்

ஆப்பிரிக்கா

பாதிப்பு: 2,13,043

தென் ஆப்பிரிக்கா 55,421

எகிப்து 38,284

நைஜீரியா 13,873

அல்ஜீரியா 10,484

கானா 10,358

கேமரூன் 8,681

மொராக்கோ 8,533

சூடான் 6,582

செனகல் 4,759

டிஆா் காங்கோ 4,515

பிற நாடுகள் 51,553

 

பலி: 5,734

எகிப்து 1,342

தென் ஆப்பிரிக்கா 1,210

அல்ஜீரியா 732

சூடான் 401

நைஜீரியா 382

கேமரூன் 212

மொராக்கோ 211

டிஆா் காங்கோ 98

மாலி 96

கென்யா 92

பிற நாடுகள் 958

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT